தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Arikomban Elephant: அரிக்கொம்பனை 'ரவுடி யானை' என சொல்லக்கூடாது என வழக்கு: நீதிமன்ற உத்தரவு என்ன? - நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது.

arikkomban
கோப்புபடம்

By

Published : Jun 16, 2023, 8:01 PM IST

Updated : Jun 16, 2023, 9:17 PM IST

சென்னை:கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியிலிருந்து வந்த அரிக்கொம்பன் ஊருக்குள் புகுந்து ஊர் மக்களைத் தாக்கிய விவகாரத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக வனப்பகுதி வழியாகத் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது.ஊருக்குள் புகுந்து ஊர் மக்களைத் தாக்கிய விவகாரத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் கம்பம் பகுதியில் அடங்காமல் வெளியே சுற்றி மக்களுக்கு இடையூறு அளித்துக் கொண்டிருந்தது யானை.

இதையடுத்து வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி யானையைப் பிடித்தனர்.பின் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோதையாறு அணைப்பகுதியில் குட்டியாறு என்ற இடத்தில் விடப்பட்டது.

பின்னர், யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மூலமாகத் தொடர்ந்து நடவடிக்கைகள் வனத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் யானையின் நடமாட்டத்தினை கண்காணிக்க கோதையாறு வனப்பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும்,யானை நடமாட்டத்தினை களக்காடு அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர் என வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் போதுமான அளவு உணவு மற்றும் தண்ணீர் இல்லை என்பதால் கேரளாவில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவர் அளித்த மனுவில், அரிக்கொம்பன் யானையை "ரவுடி யானை" என இழிவாக சித்தரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.அதற்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது வனத்துறையினர் தரப்பில் களக்காடு - முண்டந்துறையில் அரிக்கொம்பன் யானை நலமாக உள்ளதாகவும், அதன் நடமாட்டம் தொடர்ந்து வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானையை எங்கு விட வேண்டும் என முடிவு செய்ய வனத்துறையினரே வல்லமை பெற்றவர்கள் எனவும் மேலும் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அப்போது, ஊடகங்களில் பரவி வரும் ”ரவுடி யானை” என செய்தி வெளியிட கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.பின் இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் ஊடகங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனுதாரர் ஜோசப் தனியாக வழக்கு தொடரலாம் எனவும் இந்த வழக்கில் பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:ஆளுநர் தனது அதிகாரத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் - வைகோ விளாசல்

Last Updated : Jun 16, 2023, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details