தமிழ்நாட்டில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24 வரை மட்டுமே கூட்டத்தொடர் நடைபெற்றது. இதனையடுத்து கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க தலைமைச் செயலகத்தில் போதுமான இடவசதி இல்லை.
இதனால் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. கூட்டத்தொடருக்கு வரும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா பரிசோதனை, தொற்று இல்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றுவர வேண்டும் என்று பேரவைத் தலைவர் தனபால் அண்மையில் அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்க பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடியது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவை தலைவர் தனபால், தனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 14ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து தீர்மான குறிப்பு வாசிக்கப்படும் அதன் அடிப்படையில்,
இரங்கல் தீர்மானங்கள்,