சென்னை:ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (40). இவர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில்,செந்திலுக்கும், நடுகுத்தகை, பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த மதன் (35) என்பவரது மனைவி கனிமொழி (30) என்பவருக்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்துவந்துள்ளது.
கொடுக்கல் வாங்கலில் தகராறு
மேலும், செந்தில், கனிமொழிக்கு வீடு கட்டுவதற்கு கொஞ்சம், கொஞ்சமாக ஐந்து லட்சம் ரூபாய்வரை பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், செந்தில் கொடுத்த பணத்தை மதன், கனிமொழியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு செந்தில், மதன் வீட்டுக்குச் சென்று உள்ளார். அப்போது, அவர் கொடுத்த பணத்தை மதனிடம் திரும்பக் கேட்டுள்ளார். இதனால் செந்தில், மதன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மதன், அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சார்ந்த ஆரோன் என்ற அருண்பாபு (26), விக்னேஷ் (என்ற) ரியாஸ் (20) ஆகியோர் சேர்ந்து செந்திலைக் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.