தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டுக் குட்டி இறந்த சண்டை தற்கொலையில் முடிந்தது - ஆட்டுக்குட்டி சண்டை

சென்னை: ஆவடி அருகே ஆட்டுக்குட்டி இறந்த சம்பவத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட வீடு

By

Published : Mar 18, 2019, 10:07 PM IST

ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி சங்கீதா(24). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும், அவரது மாமியார் அமிர்தத்திற்கும் இடையே அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்படுவது வழக்கம். இதையடுத்து இன்று காலையில் வீட்டில் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று முள் வேலியில் சிக்கி இறந்து விட்டது.

இதனை சரிவர பார்த்துக் கொள்ளாத முடியாதா எனக் கூறி சங்கீதாவுடன் அமிர்தம் வாய் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details