தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை! - Anbuchezhiyan IT raid

சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!
சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!

By

Published : Aug 3, 2022, 8:19 AM IST

Updated : Aug 3, 2022, 9:36 AM IST

சென்னை: சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அலுவலகம் உட்பட 10 இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 2)வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் நேற்று காலை 5 மணி முதல் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அதேபோல் சென்னை தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி தாணு அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அலுவலகத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து சென்னை தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லத்திலும், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியனின் தம்பி அழகர்சாமி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்கள், கலைப்புலி S. தாணு, எஸ்.ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, தியாகராஜன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் வீடு உள்ளிட்ட அவர்களது அலுவலகங்களிலும் விடிய விடிய தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 3, 2022, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details