தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு.. 'இறுகப்பற்று' திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! - Irugapatru

Irugapatru Movie: தெனாலி ராமன், எலி போன்ற காமெடி படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில், குடும்ப உறவுகள் பற்றி வெளியாகியுள்ள 'இறுகப்பற்று' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு
இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 10:49 PM IST

சென்னை: ரசிகர்களை கவரும் விதமான கருத்தாக்கம் கொண்ட படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக 'இறுகப்பற்று' திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியானது. தெனாலி ராமன், எலி போன்ற காமெடி படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இன்றைய இளைஞர்கள் குடும்ப வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவற்றை எளிதாக களையும் விதம் பற்றியும் தெளிவாக அலசி இருந்த இப்படம், வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு அத்தாட்சியாக, படம் வெளியாகிய இரண்டாவது நாளிலிருந்து அனைத்து திரையரங்குகளிலும் 'இறுகப்பற்று' படத்திற்கான காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

படத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இறுகப்பற்று திரைப்படம் வார இறுதி நாட்களில் மிகச்சிறப்பாக முன்னேறி வருகிறது. முதல் நாளிலிருந்து இரண்டாவது நாளிலேயே 225% வளர்ச்சியை பெற்றுள்ளது.

பார்வையாளர்கள் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு ஆதரவு தர தவறியது இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி தயாராகிறது” என்று கூறியுள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கணவன்‌ - மனைவி இடையே இருக்கும் சாதாரண பிரச்னை, எப்படி மிகப் பெரிய பிரச்னையை உண்டுபண்ணி விவாகரத்து வரை செல்கிறது என்பதையும், இருவரும் எப்படி விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும் என்பதையும் இப்படம் எடுத்துக் காட்டுகிறது.

அனைத்து பிரச்னைகளுக்கும் விவாகரத்து தீர்வாகாது என்ற தெளிவான கருத்தையும் இப்படம் உணர்த்துகிறது. கடந்த வாரம் வெளியான 9 படங்களில் ‘இறுகப்பற்று’ திரைப்படம் முன்னிலையில் இருப்பதோடு, குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Rajinikanth: புதிய கெட்டப்பில் கலக்கும் ரஜினி.. படப்பிடிப்பு தளத்தில் வெளியான வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details