சென்னை மியூசிக் அகாதமியில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.பி. ஷா, தி இந்து குழுமத் தலைவர் என். ராம், சட்ட நிபுணர் உமா ராமநாதன், பத்திரிகையாளர் ரோகிணி மோஹன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொது விவாதத்தில் பேசிய தி இந்து குழுமத் தலைவர் என். ராம், "தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை இந்திய இறையாண்மைக்கு வெளியில் உள்ளது என்பது தெரிகிறது. இந்த மூன்றும் ஆயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டியுள்ளது. இந்தியா கடந்துவந்த சுதந்திரப் போராட்டம், வரலாறு, தியாகங்கள் உள்ளிட்டவைகள் இவற்றால் உடைக்கப்பட்டுள்ளன எனலாம்.