பொருளாதார சரிவு, கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவை உலகளவில் ஏற்றுமதி, இறக்குமதியைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,025க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்வு! - 128 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.1,024 உயர்ந்து, சவரன் 33 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
![இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்வு! the-highest-gold-](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6287986-thumbnail-3x2-l.jpg)
the-highest-gold-
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 128 உயர்ந்து, சவரன் 4 ஆயிரத்து 153 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு தங்கம் 1,024 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமிற்கு 1.60 காசுகள் உயர்ந்து கிராம் ரூ. 50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பத்து கிராம் தங்கத்தின் 43 ஆயிரத்து 149 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது.
இதையும் படிங்க:சரிந்தது தங்கம் விலை!
Last Updated : Mar 4, 2020, 11:38 AM IST