தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை விற்பனை வழக்கு;  கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்க மறுப்பு - உயர் நீதிமன்றம்

சென்னை : நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட அருள்சாமி உட்பட மூன்று பேருக்கு பிணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 11, 2019, 6:58 PM IST

நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றிய அமுதவல்லி, பிறந்த குழந்தைகளை போலி பிறப்புச் சான்று தயாரித்து கடந்த 30 ஆண்டுகளாக விற்பனை செய்வதாக ரமேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடி காவல் துறையினருக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்துவருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அருள்சாமி, ரேகா, நந்தகுமார் ஆகியோர் ஏப்ரல் 24ஆம் தேதி பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


அந்த மனுவில், குழந்தை விற்பனை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தங்களுக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் மனுதாரர்கள் மீது கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால், மனுதாரர்களுக்கு பிணை வழங்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details