தமிழ்நாடு

tamil nadu

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இத்தனை கோடியா!

By

Published : Feb 14, 2020, 11:39 PM IST

சென்னை: 2017-18 ஆம் ஆண்டில் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகை 4,073 கோடி ரூபாயாக உள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The GST payable to the central government to Tamil Nadu is Rs 4,073 crore
The GST payable to the central government to Tamil Nadu is Rs 4,073 crore

பொருள்கள் மற்றும் சேவை வரிகளை (ஜிஎஸ்டி) பொறுத்தமட்டில், 2017-18ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 4,073 கோடி ரூபாய். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உரிய நேரத்தில் வரும் என எதிர்பார்த்தாலும் 2021-22 வரவு, செலவு திட்டத்தில் 46,195.55 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2021-22ஆம் ஆண்டில் 1,52,270.66 கோடி ரூபாயாகவும், 2022-23ஆம் ஆண்டில் 1,73,664.49 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-20ஆம் ஆண்டு வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார் வாகன வரி வருவாய், பொருளாதார தேக்க நிலையின் காரணமாக 6018.63 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 14,435.09 கோடி ரூபாயாகவும் பொதுவான பொருளாதார வளர்ச்சி அடிப்படையில், வரும் ஆண்டுகளில் 14 சதவிகிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட்: தமிழ்நாடு உணவுப் பொருள் வணிக வளாக தலைவரின் நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details