சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 25) சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாநில தலைவர் அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநாட்டில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி அழைப்பில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைப்பதாக வரும் தகவல் வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயதினை உயர்த்தும்போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்.
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் பத்திரங்களாகவும், கடன் பத்திரங்களாகவும் வழங்கப்படும் என வரும் தகவலுக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது பெறும் பலன்களின் அடிப்படையிலேயே, திருமணம், கடன்களை அடைத்தல் போன்றவற்றிற்கு திட்டமிட்டு இருப்பார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் இந்தச் செய்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக வழங்கினார்.
மீண்டும் போராட நேரிடும்...
அப்போது இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் மீது, எஸ்மா டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இடம்பெற்றிருந்தார்.
தற்போது ஓய்வுபெறும் வயதை குறைத்து, மீண்டும் ஓய்வூதிய பலன்களை கடன்பத்திரங்களாக வழங்கினால் மீண்டும் அதேபோல் போராட நேரிடும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 40 ஆண்டுகளாக பெற்ற உரிமையை காப்பதற்காக போராடும். மேலும் தற்போது மத்திய அரசால் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படியையும், மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க:'ஒன்றியம்' எனும் வார்த்தையை கூறியே ஒப்பேற்ற எண்ணாதீர்கள் - சீமான்