தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை - சரத்குமார் - ஆன்லைன் ரம்மி தடை

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரிக்கை  - சரத்குமார்
ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரிக்கை - சரத்குமார்

By

Published : Dec 13, 2022, 5:26 PM IST

Updated : Dec 13, 2022, 9:05 PM IST

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை - சரத்குமார்

சென்னை: ராஜரத்தினம் மைதானம் அருகில் மது மற்றும் போதைப் பொருட்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "மது மற்றும் போதைப்பொருட்களை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றிட "காலத்தின் கட்டாயம்" என்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்துள்ளோம்.

சமுதாயம் நல்வழியில் செல்வதற்கு பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றோம். கடந்த மூன்றாம் தேதியே நடந்திருக்க வேண்டிய போராட்டம் அனுமதி இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு மிக விரைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்துள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்ட தூரம் மாரத்தான் ஓட்டம் மேற்கொள்ள இருக்கிறோம்.

தமிழக அரசு மதுவில் இருந்து வரும் வருமானத்திற்கு மாற்றாக வேறு வழியை தேர்வு செய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மி விளம்பரப் படமானது நான் இரண்டு வருடத்திற்கு முன்பாக நடித்தது. ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது அதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது அரசின் வேலையாகும். ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரப் படங்களில் நடித்ததற்காக நான் அதற்கு ஆதரவாக செயல்படவில்லை. தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள ஆன்லைன் ரத்து தொடர்பான மசோதாவை விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுக்கிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!

Last Updated : Dec 13, 2022, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details