சென்னை:தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 4 ஆயிரத்து 308 இடங்களும், 18 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,483 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,166 இடங்களும் உள்ளன.
மேலும் இரண்டு அரசு பல்மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 165 இடங்களும், 18 சுயநிதி பல்மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,125 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 635 இடங்களும் உள்ளன. நடப்பாண்டில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 957 எம்பிபிஎஸ் இடங்கள், 1, 925 பிடிஎஸ் இடங்களுக்கு இன்று(டிச.19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 10,12ஆம் வகுப்பு முடித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஜனவரி 7ஆம்தேதி மாலை 5 மணி வரையில் https://tnmedicalselection.net/ மற்றும் https://ugreg.tnmedicalonline.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.