தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரிழந்த ரானுவ வீரரின் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்க வேண்டும் - ஸ்டாலின் - DMK leader Stalin's condolences

சென்னை: ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹத்துவா மாவட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மறைவிற்கு தமிழ்நாடு அரசு நிதி வழங்கி உதவ வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin

By

Published : Aug 1, 2020, 10:22 PM IST

Updated : Aug 1, 2020, 10:27 PM IST

இதுதொடர்பாக திமுக தலைவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹத்துவா மாவட்டத்தில் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு வீரர் எஸ்.திருமூர்த்தி வீரமரணம் அடைந்தார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன்.

தனது 21ஆவது வயதில் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து - தற்போது ஹவில்தாராக - தியாக உணர்வுடன் பணியாற்றிய அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டு, திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிதியுதவியும் வழங்கிட வேண்டுமென முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவை மாணவர்களை வியந்து பாராட்டிய மோடி!

Last Updated : Aug 1, 2020, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details