இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், “நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் சட்டமாக மாற்றப்படவில்லை. எனவே அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஏழை, எளிய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது வரவேற்கத்தக்கது.