தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணின் கையை பிடித்து இழுத்த அரசு அதிகாரி - அடித்து உதைத்த பொதுமக்கள்! - kicked by the public

சென்னையில் ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்த அரசு அதிகாரியை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

பெண்ணின் கையை பிடித்து இழுத்த அரசு அதிகாரி அடித்து உதைத்த பொதுமக்கள்!
பெண்ணின் கையை பிடித்து இழுத்த அரசு அதிகாரி அடித்து உதைத்த பொதுமக்கள்!

By

Published : May 9, 2022, 10:43 AM IST

சென்னை : புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 25 வயதுடைய இளம் கைம்பெண் தனது தாய் வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த பெண் தனது பெயரில் குடும்ப அட்டை கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளார். இதையடுத்து ஆவணங்களை சரிபார்க்க சுனாமி குடியிருப்பு உணவு பொருள் வழங்கல் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் அயாத் பாஷா(45) என்பவர் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் ஆவணங்களை சரிபார்ப்பதாக கூறி ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் கேஸ் பில் ஆகியவற்றை கொண்டுவருமாறு கேட்டுள்ளார். பெண் ஆவணங்களை கொடுத்த போது தான் அரசு அதிகாரி என்றும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறி கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அலறி அடித்துக் கொண்டு அந்த பெண் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அரசு அதிகாரி அயாத் பாஷாவை அடித்து உதைத்தனர்.

இதனால் அரசு அதிகாரி அயத்பாஷா அந்த இளம்பெண் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கைக்கு கத்திக்குத்து - குற்றவாளிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details