தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றக் கூட்டம் - இணையவழி சூதாட்ட தடை குறித்து வலியுறுத்திய அமைச்சர்

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை பாதுகாக்க தீவிர நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 2, 2023, 10:34 PM IST

சென்னை:ஒன்றிய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவர் தலைமையில் இன்று (ஆக. 02) 51ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச்செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார்.

இணையவழி விளையாட்டுகள் (Online gaming), சூதாட்ட விடுதிகள் (Casino) மற்றும் குதிரைப் பந்தயம் (Race Course), ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவால் வலிமையான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

இணையவழி சூதாட்டம் (அதாவது) இணையவழி பந்தயம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுகள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.

சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது எனத் தெரிவித்தார்.

மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:Asian hockey championship: வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி உறுதி

ABOUT THE AUTHOR

...view details