சென்னை:சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு கெளரிவிநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்பது குறித்து இன்று (ஜூன் 20) இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலங்களில் 96 ஏக்கர் நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலர் விரைவாக ஆய்வு செய்து தனியார் பெயரில் உள்ள பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தனியார் பெயரில் உள்ள அனைத்து நிலங்களையும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய உடனடியாக அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயிலுக்குச் சொந்தமான மீதமுள்ள 46 ஏக்கர் நிலத்தில், அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டுமானங்கள் தடுத்து நிறுத்தப்படும்.