சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). இவர் நெற்குன்றம் சாலையில் உள்ள மென்ஸ் தர்பார் என்ற மதுபானக்கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது, குடிபோதையில் கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, கடை ஊழியர்கள் தாக்கியதில் ஆகாஷிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது சகோதரர் மோனிஷ் குமார்(22) தனது 20 நண்பர்களுடன் அதே மதுபானக்கடைக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது, கடை ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கடை ஊழியர்களான புவனேஷ்வரன், அறிவழகன், சிவா ஆகிய மூன்று பேரை சரமாரியாக அவர்கள் தாக்கியுள்ளனர்.