தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஜி20 பணிக்குழு கூட்டம் நாளை தொடக்கம் - சென்னையில் ஜி20 கூட்டம்

சென்னையில் நாளை தொடங்கும் ஜி20 பணிக்குழு கூட்டத்தில் விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் பற்றாக்குறை குறித்து விவாதிக்கப்படும் என, மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

g20_meeting
g20_meeting

By

Published : Mar 23, 2023, 6:40 PM IST

Updated : Mar 24, 2023, 8:30 AM IST

சென்னை: நடப்பாண்டுக்கான ஜி20 மாநாடு, இந்தியாவின் தலைமையில் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆயத்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் உறுப்பினராக உள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

சென்னையில் ஜி20 பணிக்குழு கூட்டம் நாளை தொடக்கம்

இந்நிலையில் சென்னையில் நாளையும் (மார்ச் 24) நாளை மறுநாளும் (மார்ச் 25) இரண்டாவது நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். 20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டமானது மேக்ரோ பொருளாதாரப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உணவு, எரிசக்தி, பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், நிதிப்பரிமாற்ற பாதைகள் ஆகியவை மீது இந்தக் குழு அதிக கவனம் செலுத்த உள்ளது. இந்தப் பிரச்னைகள் சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் (Second Framework Working Group Meeting) குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறுகையில், "நிதி தொடர்பான முதல் செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் சென்னையில் நாளை (மார்ச் 24) துவங்க உள்ளது. இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வு, எரிசக்தி சார்ந்த பொருட்கள் பற்றாக்குறை, தட்பவெட்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றம் மூலம் வர கூடிய பொருளாதார தாக்கம் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. பொருளாதாரம் சம்பந்தபட்ட வரன்முறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தகவல் மற்றும் அனுபவ பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

உலக வங்கியின் மாநாட்டின் போது சர்வதேச நிதித்துறை அமைச்சர்கள் சந்திப்பார்கள். அப்போது சில கருத்துகளை முன்வைக்க இந்த மாநாடு உதவியாக இருக்கும். மேலும் பசுமை வாயுக்கள், சுற்றுப்புற சூழலில் தாக்கத்தை குறைக்க எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதிகமாகி வருகிறது. இதனைப் பிற நாடுகள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்து ஆலோசிக்க உள்ளோம்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுடன், சூரிய சக்தி ஆற்றலை அதிகரிக்கப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. உணவு, ஆற்றல் பாதுகாப்பு, வானிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. சிறு, குறு தொழில்களின் நீடித்த வளர்ச்சி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யார் அதிமுக? - சட்டப்பேரவையில் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினர் கடும் அமளி!

Last Updated : Mar 24, 2023, 8:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details