தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜி 20 கல்விப்பணிக்குழு கருத்தரங்கம் - சென்னையில் நாளை தொடக்கம் - G20 Education Working Group seminar will begin

ஜி 20 கல்வி பணிக்குழுவின் முதல் கூட்டம் சென்னை ஐஐடியில் நாளை தொடங்கி நடைபெறுகிறது. இதில், அனைவரையும் உள்ளடக்கிய, சமமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் கற்றல் வாய்ப்புகள் குறித்து ஜி 20 கல்விப்பணிக்குழு கவனம் செலுத்த உள்ளது.

ஜி 20 கல்விப் பணிக்குழு   சென்னையில் நாளை துவக்கம்
ஜி 20 கல்விப் பணிக்குழு சென்னையில் நாளை துவக்கம்

By

Published : Jan 30, 2023, 7:22 PM IST

சென்னை:ஜி 20 கல்வி பணிக்குழுவின் முதல் கூட்டம் சென்னை ஐஐடியில் நாளை தொடங்கி நடைபெறுகிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை எதிர் நோக்கும் பிரச்னைகள் குறித்தும், கரோனா தொற்றினால் மாணவர்களின் கல்வி பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1, 2ஆகிய தேதிகளில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற தலைப்புகளில், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவரும் கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இரண்டு நாள் விவாதங்களில் கல்வி பணிக்குழு கவனம் செலுத்த உள்ளது. கல்வியின் முழுமையான மாற்றத்திற்கான திறனை உணராமல் தடுக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும்; இந்த உணர்வின் அடிப்படையில் முன்னுரிமைப் பகுதிகள் ஆலோசனைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள கற்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளை, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பயனுள்ள கருவியாக கல்வி மாறுவதைத் தடுக்கும் பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வு காண்பது; கடந்த காலங்களில் பெற்ற பலன்கள், குறிப்பாக கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் பற்றிய கட்டமைப்புக்கு உதவுதல்; கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள், உள்ளடக்கங்கள், பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள், மதிப்பீடு மற்றும் பலவற்றை மறுபரிசீலனை செய்வது, இதன் மூலம் 21ஆம் நூற்றாண்டில் தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்களுக்கு மிகவும் பொருத்தமானதாக கல்வியை மாற்றுவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

மேலும் சமகால சவால்களை எதிர்கொள்ள அனைத்து வயதினரையும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களை கல்வி தயார்படுத்துகிறது என்பதை உறுதிசெய்வது; அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் அதை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கும் மக்கள், தொழில்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்தல் இக்கருத்தரங்கில் பேசப்படவுள்ளது.

மேலும், அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் குறிப்பாக கலவையான கற்றல் சூழலை உறுதி செய்தல்; ஒவ்வொரு நிலையிலும் தொழில் நுட்பம் சார்ந்த கற்றலை மேலும் உள்ளடக்கிய, தரமான மற்றும் கூட்டுமுயற்சியாக்குதல்,
திறன்களை உருவாக்குதல், வேலையின் எதிர்காலச் சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவித்தல்,
ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், வளமான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்
சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்பது பற்றிய கருத்தரங்கும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பன்னாட்டு பிரமுகர்களுக்கு வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details