ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் 61 நாள்களாக நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து மத்திய அரசு இன்றுமுதல் உள்நாட்டு விமானங்களை நிபந்தனைகளுடன் இயக்க அனுமதியளித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. முதல் விமானம் சென்னையிலிருந்து டெல்லிக்கு இன்று காலைப் புறப்பட்டுச் சென்றது.
அதைத்தொடர்ந்து கோவையிலிருந்து ஊரடங்கிற்குப் பிறகு முதல் விமானமாக ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் 34 பயணிகளுடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
பயணிகள் அனைவருக்கும், உடல் வெப்ப பரிசோதனை செய்தபிறகு வலது கையில் முத்திரைகள் பதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். அப்படி முத்திரைகள் பதிக்கப்பட்டவர்கள் 14 நாள்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி...! விமான பயணத்துக்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு