தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் கோப்பு? - The first file signed by Chief Minister Stalin

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ள நிலையில், கரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைகளுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் கோப்பு?
முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் கோப்பு?

By

Published : May 6, 2021, 11:38 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நாளை(மே.7) பதவியேற்க உள்ளார். அவருடன் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். அவா்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிலையில், முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற உடன் பின்வரும் கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில்,

  1. கரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைகளுக்கு ரூ. 4000 வழங்குதல்.
  2. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை.
  3. மகளிர் பேறுகால உதவித்தொகை உயர்வு.
  4. உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட கோப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details