நாடு முழுவதும் உள்ள என்ஐடி, ஐஐடி, போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதில், முதல்நிலைத் தேர்வானது என்ஐடி சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுவதுண்டு.
கரோனா பரவல் காரணமாக ஜேஇஇ முதல்நிலை தேர்வு இன்று (செப்.1) தொடங்கி செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 473 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ்நாட்டில் 34 மையங்களில் 53, ஆயிரத்து 765 பேர் எழுதுகின்றனர். ஹால் டிக்கெட்டில் கூறப்பட் டுள்ள வழிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.