தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீட்டா அமைப்பிற்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்

சென்னை: பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க கோரி மத்திய அரசுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ban-the-beta-system
ban-the-beta-system

By

Published : May 31, 2021, 6:08 PM IST

பீட்டா அமைப்பிற்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

”மாட்டுப் பாலுக்குப் பதில் சோயா பால் உள்பட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று இந்தியாவின் மிகப்பெரிய அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பால்வளத்தை அழித்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்க நினைக்கும் தீய சக்தி பீட்டா அமைப்பிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி

மேலும், இந்திய பால்வளத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களையும் காத்திட பீட்டா அமைப்பிற்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து மீட்டதுபோல் இந்திய பால்வளத்தை காத்திட பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும்”எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:காற்றில் பரவும் வீரியமிக்க புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details