தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? அண்ணா பல்கலைக்கழகம் கேள்வி - அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்புமாறு அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்' அறிவுறுத்தி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 31, 2023, 6:23 PM IST

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும் என 'அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்' (Anna University Examination Controller) அறிவுறுத்தி உள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் 2022-2023 ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் முதல் 2 வருடங்கள் தமிழ்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் முறைப்படி தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நேர்காணல் மூலம் தேர்வுச் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

ஆனால் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள் மூலம் நடத்தி வருவதாக புகார் வருகின்றன. இதனால் பொறியியல் பாடத்தில் உள்ள தமிழ் பாடத்தினை தமிழ் பட்டம் பெற்றவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 'அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல்' (Anna University Examination Controller Shaktivel) அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகள் (Affiliated Colleges of Anna University), தன்னாட்சிக் கல்லூரிகள் உட்பட அரசுப் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "அண்ணாப் பல்கலைக் கழகத்தின் இளங்கலைப் பொறியியல் மாணவர்களுக்கு முதல் பருவத்தில் தமிழர் மரபு, இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில் நுட்பமும் ஆகிய பாடங்கள் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திட்டத்தின் படி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பாடங்களை முறையாகவும், செம்மையாகவும் நடத்த தகுதியுடைய தமிழாசிரியர்களை ஏற்கனவே கல்லூரிகளில் நியமனம் செய்து இருப்பீர்கள். அவ்வாறு தகுதி உடைய ஆசிரியர்களை இன்னும் நியமிக்காமலிருந்தால் உடனடியாக அவர்களை நியமிக்க வேண்டியது இன்றியமையாத கடமையாகும். அத்தகைய ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறைந்தது ஏம்ஏ., எம்பில்., தேசிய தகுதித் தேர்வு, மாநில அளவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேல் கல்வித் தகுதி உடையவர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பது வரவேற்க தக்கது.

கல்லூரியில் தமிழ் ஆசிரியர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர், கல்வித்தகுதி, நியமனம் செய்யப்பட்ட நாள் முதலிய விபரங்கள் அடங்கிய தகவலை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுலவத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் புதியதாக நியமனம் செய்ய வேண்டியிருந்தால் அவர்களை நியமனம் செய்த பின்னர் அது குறித்த விபரத்தையும் ஜூன் 12 ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை.. துணை வேந்தர்களுடன் ஜூன் 5ம் தேதி ஆளுநர் ஆலோசனை.. அமைச்சர் பொன்முடி ரியாக்ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details