தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் காழ்ப்புணர்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை! - minister

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை

By

Published : May 17, 2023, 4:47 PM IST

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை:நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. கணக்கு வழக்கு விவரங்களை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அறக்கட்டளையின் நிர்வாகி சமர்ப்பித்துள்ளார். சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகம் அமைந்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகள் உட்பட அனைத்தையும் உதயநிதி ரசிகர் மன்றச் செயலாளர் பாபு என்பவர் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொண்டு அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறையினர், சுமார் 12 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்றனர். அப்போது இன்று காலை அனைத்து ஆவணங்களையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பாபு இன்று காலை 10 மணியளவில் அறக்கட்டளை சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பித்து விசாரணைக்கு ஆஜராகினார். சுமார் 2 மணி நேரமாக, உதயநிதி ரசிகர் மன்ற அறக்கட்டளை நிர்வாகி பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மீண்டும் நாளை ஆஜராகுமாறு அவரிடம் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாபு, ”எழும்பூரில் உள்ள உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று சோதனை நடந்தது. எதற்காக இந்த சோதனை மேற்கொண்டனர் என்பது குறித்த விளக்கம் தன்னிடம் தெரிவிக்கவில்லை” என அவர் கூறினார்.

சோதனையின்போது தான் இல்லையென்பதால் சில ஆவணங்களை தன்னிடம் கேட்டதாகவும் அதனடிப்படையில் இன்று ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்ததாகவும் அவர் கூறினார்.

”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், என்றுமே அறத்துடன் உதயநிதியின் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார். மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் நாளையும் ஆஜராகி உரிய விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறினார். நேற்று லைகா நிறுவனம் தொடர்புடைய சோதனையா என்ற கேள்விக்கு, ’’தொடர்புடையதா?’’ எனத் தெரியவில்லை அவர் கூறினார்.

இதையும் படிங்க:புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழரின் பாரம்பரிய உடையில் தோன்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ABOUT THE AUTHOR

...view details