சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தொலைக்காட்சிகள், வானொலிகள், டிஜிட்டல், சமூக ஊடகங்களில் தேர்தல் பரப்புரை, விளம்பரம் செய்ய இன்று (பிப்ரவரி 17) மாலை 6 மணி வரையுடன் முடிவடைகிறது எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.