சென்னை டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ். இவரது குடியிருப்பில் கடந்த 10 ஆம் தேதி உளவுப்பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயன் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு, ராவும், கார்த்திகேயனும் மோதி கொண்டனர். இவர்கள் மோதி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் உடனடியாக இரண்டு காவலர்களையும் பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை காவலர் வெங்கடேஷ்வர ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "கள்ளச் சந்தையில் மதுவிற்பனை செய்ததை தட்டி கேட்டதற்காக தீர விசாரிக்காமல் காவல் ஆணையர் என்னை பணியிடை நீக்கம் செய்தார். குறிப்பாக தான் வசித்து வந்த காவலர் குடியிருப்பையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறை உயர் அலுவலர்களை சந்தித்து முறையிட்டும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுத்தேன்.