சென்னை: அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர். செல்வவிநாயகம் (ஏப்ரல் 24) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
2025க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் பயனாக, காசநோயை குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணப்படுத்தப்படுகின்றனர். அ சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.