சென்னை : கோவிட்- 19ஆல் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விவரங்களை அனுப்பிவைக்குமாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தயாரித்த ஆவணத்தின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்தல், ஆதரவற்ற அல்லது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளைக் கையாள்வதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.
கோவிட் பரவல்; பெற்றோரை இழந்த மாணாக்கர்கள் விவரங்கள் சேகரிக்க உத்தரவு - மெட்ரிக்
கோவிட்- 19 பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விவரம் கோரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களில், பெற்றோரை இழந்த மெட்ரிகுலேஷன் மாணவர்களின் விவரங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளிடம் பெறப்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்டத்திற்குள்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்தாலோ ( அ ) பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்ற குழந்தைகளின் விவரத்தை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மேயர் பணியை மக்கள் பணியாக மாற்றினேன்- மு.க. ஸ்டாலின்