தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு!

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிக்க 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் கால அவகாசம் கொடுத்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு விண்ணப்பம்
10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு விண்ணப்பம்

By

Published : May 22, 2023, 9:42 PM IST

சென்னை:2022 - 2023ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 10ஆம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு உதவும் வகையில் நடப்புக் கல்வி ஆண்டிலேயே தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் துணைத் தேர்வினை அறிவித்துள்ளது, அரசுத் தேர்வுத்துறை இயக்ககம்.

இதனைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு துணைத்தேர்வினை எழுதுவதற்கு அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள துணைத்தேர்விற்கு முதன்முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள், ஏற்கனவே 2012 முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க:“ஃபீளீஸ் எங்க ஸ்கூல்ல பசங்கள சேருங்க”: வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் செய்த மாணவர்கள்!

அறிவியல் பாடச் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்தப் பின்னரே கருத்தியல் தேர்விற்கு தனித்தேர்வராக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று 125 ரூபாய் கட்டணத்தை பணமாகச் செலுத்தி ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுமதிச் சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு தேர்வர் அனுமதிக்கப்படுவர்.

செய்முறைப் பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் 2023 ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும். பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு கண்டிப்பாக தேர்வரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அறிவியல் செய்முறைத்தேர்விற்கான விண்ணப்பப் படிவத்தை அரசுத் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:உலகளாவிய தெற்கின் குரலாக திகழும் பிரதமர் மோடி - FIPIC உச்சிமாநாட்டில் பப்புவா நியூ கினியா பிரதமர் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details