தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்; வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை... - உக்ரைன்

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என மீண்டும் உக்ரைன் போர் தொடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்
தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்

By

Published : Oct 11, 2022, 6:26 PM IST

உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை, தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா - கிரீமியா இணைப்பு பாலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, உக்ரைன் தான் இச்சம்பவத்துக்கு காரணம் என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. இதனை பயங்கரவாதச் செயல் என ரஷ்யா கூறியுள்ளது.
இதையடுத்து, உக்ரைனின் தலைநகரமான கீவ் உள்பட பல முக்கிய நகரங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’’தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளதால், இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.

உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றவும், உக்ரைனில் உள்ள இந்தியா்களை நாங்கள் (இந்திய தூதரகம்) அணுகும் வகையில், தங்களின் இருப்பை தூதரகத்துக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்

ABOUT THE AUTHOR

...view details