சென்னை: ஏழை எளிய மாணவர்கள் ஒன்றிய, மாநில அரசுகள் நிதி உதவியோடு தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆரம்ப சேர்க்கை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் எண்ணிக்கை, 1,24,859 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டு 1,15,771 ஆக குறைந்து. நடப்பாண்டில் 1,07,992 ஆக மேலும் சரிந்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கு மறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஆரம்பநிலை வகுப்பிற்கு ஒதுக்கப்படும் மொத்த இடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதன் காரணமாக இடங்கள் குறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.