தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடியில் இறந்தவர் மாணவர் அல்ல; தற்காலிகப் பணியாளர் - Temporary employee

சென்னை ஐஐடி வளாகத்தில் உயிரிழந்தவர் ஆராய்ச்சி மாணவர் அல்ல, தற்காலிக பணியாளர் என ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

By

Published : Jul 2, 2021, 12:25 PM IST

சென்னை:ஐஐடி வளாகத்தில் நேற்று (ஜூலை 1) மாலை எரிந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் ஐஐடி படிக்கும் ஆராய்ச்சி மாணவர் என முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், உயிரிழந்த நபர் மாணவர் அல்ல, தற்காலிக பணியாளர் என்றும், இவர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை ஐஐடியில் பணியில் இணைந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு சென்னை ஐஐடி முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கிடந்த கேரள மாணவர் உடல்: காவல் துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details