இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட துணைத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.inஎன்கிற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (அக்டோபர் 28 ) காலை 11 மணிக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (அக்டோபர் 28) மதியம் 2 மணிக்கும் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் காலை 11 மணிக்கு (அக்டோபர் 29) தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - 10, 11, 12 sub examination results tommorow
சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.,28,29) வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெறும் மாணவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு மாணவர்கள் தற்போது அதே பாடத்திற்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடாது. மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கச் செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்வதுடன், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐஜிஎன்ஓயு தேர்வு முடிவுகள் வெளியீடு!