தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு! - tn election date announced

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிட்டு தேர்தல் வாக்குப்பதிவை ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒரே கட்டமாகவும், வாக்கு எண்ணிக்கையை மே 10ஆம் தேதிக்குள் முடிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

tn election date
பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு!

By

Published : Feb 16, 2021, 6:54 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு நாள் பயணமாக கடந்த வாரம் 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். சுனில், அரோரா, சுசில் சுந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜ்குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட தேர்தல் ஆணையக் குழு, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்து கருத்துகளை கேட்டு, மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஐ.ஜிக்கள், எஸ்.பி.களுடன் ஆலோசனை நடத்தியது. மேலும், காவல்துறை, சுங்கவரித்துறை, வருமான வரித்துறையைச் சேர்ந்த அலுவலர்களுடனும் ஆலோசனை நடத்தியது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியிலிருந்து தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், 80வயதிற்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் முறை இந்தத் தேர்தலில் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒரே கட்டமாக தேர்தலை ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் நடத்தவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு மாவட்ட அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான விடுமுறை நாட்கள் தேர்வு செய்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவித்து, ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவை நடத்தி முடிக்கவும், வாக்கு எண்ணிக்கையை மே 10ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:'மக்களை கசக்கிப் பிழியும் மத்திய அரசு' - விலையேற்றத்தை விவாதித்து வைகோ அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details