சென்னை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 12 இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.
இளநிலை அறிவியல் (பிஎஸ்சி) பாடப்பிரிவுகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளநிலை தொழில்நுட்பம் (பி.டெக்) (வேளாண் பொறியியல்) பி.எஸ்.சி பட்டுவளர்ப்பு, பி.டெக் உணவு தொழில் நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், பி.எஸ்சி வேளாண் வணிக மேலாண்மை ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.