தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறைகேடு: 'கடும் நடவடிக்கை எடுக்காதீங்க' என்ற எஸ்.பி.வேலுமணி தரப்பின் கோரிக்கை நிராகரிப்பு! - எஸ் பி வேலுமணி

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பு கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்கில் வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு..!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்கில் வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு..!

By

Published : Aug 11, 2022, 6:52 PM IST

சென்னை:முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்குத் டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று(ஆக 11) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தனக்கு எதிராகப்பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களைத் திரும்பப்பெறுவதாகவும், வழக்குகளை ரத்து செய்யக்கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையினை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அப்போது வேலுமணி சார்பில், கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்தத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்றும்; கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும்,

வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச்சென்ற வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details