தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின்கீழ் சானிட்டரி நாப்கின்: மாநகராட்சி திட்டம் - Sanitary Napkin in School under Nirbhaya Fund

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நிர்பயா நிதியின்கீழ் ஒரு வருடத்திற்கு 26.59 லட்சம் சானிட்டரி நாப்கின்கள் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின் கீழ் சானிட்டரி நாப்கின்
சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின் கீழ் சானிட்டரி நாப்கின்

By

Published : Dec 14, 2022, 10:44 PM IST

சென்னை: மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில், நிர்பயா நிதியின்கீழ் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தில் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சென்னைப் பள்ளிகளில் பயிலும் 25,474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டமானது எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்படும்.

சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். மேலும், மாணவிகளின் பள்ளிகளில் அவசரத் தேவைகளுக்காக கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 50 சானிட்டரி நாப்கின்கள் என்ற முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும். ஒரு வருடத்திற்கு 26.59 லட்சம் சானிட்டரின் நாப்கின்கள் சென்னைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: Video: பட்டப்பகலிலேயே நட்டுக்கிட்ட ஓட்டுநர் 'குடி'மகனால் பள்ளிப்பேருந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details