சென்னை: ஒமைக்ரான் பரவல் காரணமாக நேற்று (ஜனவரி 16) முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே சுற்றுபவரைக் கண்காணித்து வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் வாகன தணிக்கை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை காசி திரையரங்கு அருகே உள்ள காசி எஸ்டேட் இரண்டாவது தெருவில் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத் துறை உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்துவரும் வாளவந்தான், அவரது நண்பர் என்பதும், வாளவந்தான் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் காவலர் சிவகிருஷ்ணன் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தி உள்ளார்.