சென்னை: சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் தற்காலிக பணியாளர்களை, தற்போது 1400ஆக குறைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் கரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முக்கியமாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய மாநகர் முழுவதும் 12,000 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் கரோனா தொற்று ஜூலை மாதத்தில் கணிசமாக குறைந்த நிலையில் 12 ஆயிரமாக இருந்த ஊழியர்களை 5 ஆயிரத்து 527ஆக குறைத்து, ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதலின்படி தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தோம் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.