தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் அதன் பரவல் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில், சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பகுதிகளை 28 நாட்களுக்குப் பிறகு, எந்த ஒரு புதிய கரோனா தொற்று பாதிப்பும் ஏற்படாததால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நீக்குவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.