சென்னை: கொருக்குப்பேட்டை பாரதி நகர் 11ஆவது தெருவை சேர்ந்தவர் விஜி(40). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (ஜனவரி 17) காலை போர் நினைவு சின்னம் பகுதியிலிருந்து பாரிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோ தலைமை செயலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, தார்பாய் கிழிந்ததால் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த தலைமை செயலாளர் இறையன்பு விபத்தை கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு, விபத்தில் சிக்கி காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் விஜியை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.