தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைவர்களின் இல்லங்களை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்! - காந்தி அருங்காட்சியகம்

செய்தித் துறையின் நினைவகங்கள் மற்றும் தலைவர்களின் இல்லங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

தலைவர்களின் இல்லங்களை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்!
தலைவர்களின் இல்லங்களை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்!

By

Published : May 14, 2023, 3:27 PM IST

சென்னை:செய்தித்துறையின் நினைவகங்கள் மற்றும் தலைவர்களின் இல்லங்களை தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். செய்தித்துறையின் கீழ் உள்ள சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் பொலிவூட்டப்பட்ட வ.உ.சி செக்கு, மார்பளவுச் சிலை, சுதந்திரப் போரட்ட வீரர்கள் அரங்கம், தமிழ்மொழித் தியாகிகள் அரங்கம், பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம் ஆகியவற்றை தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, 2.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டு அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பொது மக்கள் அதிகளவில் பார்வையிட்டு செல்லும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று, அலுவலர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details