தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று(ஜூலை 27) முதலமைச்சர் பழனிசாமி, ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.
அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.