தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆ.ராசாவின் மனைவியை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் - chennai

சென்னை: குரோம்பேட்டை ரெலா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

ஆ.ராசா வின் மனைவியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்த முதலமைச்சர்
ஆ.ராசா வின் மனைவியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்த முதலமைச்சர்

By

Published : May 27, 2021, 9:54 PM IST

Updated : May 27, 2021, 11:03 PM IST

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் திமுக மாநில துணைப் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பரமேஸ்வரியை நேரில் சந்தித்ததோடு, தலைமை மருத்துவர் முகமது ரெலாவிடம் பரமேஸ்வரியின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவருடன் சட்டபேரவை உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், இ.கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆ.ராசாவின் மனைவியை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்

இதையும் படிங்க: 'லட்சத்தீவில் மக்கள் விரோதம்' - கமல் கடும் கண்டனம்

Last Updated : May 27, 2021, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details