சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கவும், சிறு, குறு தொழில் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் கோவைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் 23ஆம் தேதி செல்கிறார்.
23ஆம் தேதி கோவையில் இரவு தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 24ஆம் தேதி காலை கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாலையில் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்ற கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.