தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணொலி கலந்தாய்வு மூலம் காவல் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்! - காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி கலந்தாய்வு மூலம் காவல் நிலையம், குழந்தைகள் காப்பகம், காவலர் குடியிருப்பு ஆகியவற்றை திறந்துவைத்தார்.

அலுவலகங்களை திறந்து வைத்த முதலமைச்சர்
அலுவலகங்களை திறந்து வைத்த முதலமைச்சர்

By

Published : Jan 6, 2020, 12:01 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி கலந்தாய்வின் மூலம் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் உள்ளிட்ட பல அலுவலகங்களைத் திறந்துவைத்தார்.

இதில், அரியலூர் மாவட்டத்திலுள்ள காவல் அலுவலகம், வாலாஜாபாத், துவாக்குடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட 50 காவலர் குடியிருப்புகள் ஆவடி டேங்க் பேக்டரி, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், சத்தியமங்கலம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை புனித தோமையார் மலையில் விளையாட்டு மைதானத்துடன் கூடிய குழந்தைகள் காப்பகம், திசையன்விளை, சூரமங்கலம், சிவகாசி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு துறைக்கான குடியிருப்புகள் ஆகியன அடங்கும்.

அலுவலகங்களைத் திறந்துவைத்த முதலமைச்சர்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 564 வனக் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும்விதமாக ஏழு பேருக்கு மட்டும் பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், அமராவதி நகரில் மாணவர் விடுதி கட்டடம், 31 அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுசெய்யப்பட்ட 18 நூலகங்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: தொடங்கி வைத்த அமைச்சர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details