முதலமைச்சர் பழனிசாமி இன்று(பிப்.13) தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அதேபோன்று, சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் 8 கோடியே 58 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை
சுற்றுலாத்துறை சார்பில் ஒகேனக்கல்லில் 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா விருந்தினர் இல்லம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் மையம், கன்னியாகுமரியில் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலா தங்கும் விடுதி ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை
தோவாளை வட்டம் , தோவாளை, அருள்மிகு கிருஷ்ணசாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 10 ஆயிரத்து 666 சதுர அடி பரப்பளவில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம். மதுரை கள்ளழகர் கோயிலில் குடிநீர் வசதிக்காக ரூ.3 கோடியே 30 லட்சத்து 84 லட்சம் செலவில் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
கலை பண்பாட்டுத் துறை
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமத்தில் 424.44 சதுர மீட்டர் பரப்பளவில், குரலிசை, வயலின், மிருதங்கம், தவில், நாதஸ்வரம், பரதநாட்டியம், தேவாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தனித்தனி அறைகள், அலுவலக அறை, தலைமையாசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, இருப்பு அறை, மாணவர்கள், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கான தனித்தனி கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
ரூ.85 லட்சம் மதிப்பீட்டிலான மிதி படகுகள் மற்றும் துடுப்புப் படகுகள், 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விசைப் படகுகள் மற்றும் விரைவுப் படகுகள் , 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்கள் ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
இதையும் படிங்க:அரியர் தேர்வுக்கு 2ஆவது முறையாக கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்!